2025 மே 08, வியாழக்கிழமை

திடீரென வந்தார் ஆளுநர்: புதிய பிரதிநிதிகளின் வசதிகள் பற்றி ஆராயந்தார்

அப்துல்சலாம் யாசீம்   / 2018 பெப்ரவரி 01 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சி மன்றங்களின் வினைத்திறன்ககளை மேம்படுத்தும் நோக்கில்,  கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம, நேற்று (31) அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் பிரதேச சபைக்கு, திடீர் விஐயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, உள்ளூராட்சி மன்றங்களுக்கு இம்முறை புதிதாகத் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் இப்பிரதேசத்தின் அடிப்படை அபிவிருத்தி வசதிகள் தொடர்பாகவும், இறக்காமம் பிரதேச சபையின் செயலாளர் உள்ளிட்ட உத்தியோகஸ்தவர்களுடன் அவர் கலந்துரையாடினார்.

இதேவேளை இறக்காமம் பிரதேசத்துக்குட்பட்ட பகுதியில், 18,200 பேர் வாழ்ந்து வருவதாகவும் ஒரு வருடத்துக்கு ஆறு மில்லியன் ரூபாய் வருமானம் வருவதாகவும் இன்னும் சில முக்கிய வீதிகள்,நூலகங்கள் புனரமைக்கப்படாமல் இருப்பதாவும் ஆளுநரின் கவனத்துக்கு இதன்போது கொண்டுவரப்பட்டது.

அத்தோடு, ஒரு கிலோமீற்றர் வீதியை காபட் வீதியாக புனரமைக்கவுள்ளதாகவும் நவீன மயப்படுத்தப்பட்ட பொது நூலகமொன்றை அமைக்கவுள்ளதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம இதன்போது கூறினார்.

இதன்போது, கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்தன கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X