2025 மே 13, செவ்வாய்க்கிழமை

திருகோணமலைக்கு ரோட்டரி ஆளுநர் வருகை

Editorial   / 2017 நவம்பர் 05 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீத், எப்.முபாரக்

ரோட்டரி இலங்கை மாவட்ட -  3220 ஆளுநர் வண. சோமவம்ச தேரர், உதவி ஆளுநர் சிவபாதசுந்தரத்துடன் இணைந்து திருகோணமலை  ரோட்டரி  கழகத்துக்கு நேற்று  விஜயம் செய்தார்.

திருகோணமலை ரோட்டரி  கழகத்  தலைவர்  நீல் போர்ஹேம் விருந்தினர்களை வரவேற்றார்.

இதன்போது, திருகோணமலை ரோட்டரி  கழக  நடவடிக்கைகள் பற்றி செயலாளர் ஜெயசங்கர்  ஒரு சுருக்கமான விளக்கத்தைக் கொடுத்தார்.

அத்துடன், ஒரு புதிய  உறுப்பினராக வைத்திய கலாநிதி சௌந்தரராஜன்   திருகோணமலை ரோட்டரி கழகத்தில் இணைந்துகொண்டார்.

ஆளுநர் வண. சோமவம்ச தேரர் திருகோணமலை ரோட்டரி கிளப் நடவடிக்கைககளை  பாராட்டியதுடன், மேலும் அதிக உறுப்பினர்களை சேர்க்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார் .

இந்நிகழ்வின் போது, பள்ளிக்குடியிருப்பு கலைமகள் இந்து கல்லூரியின்  இரண்டு மாணவர்களுக்கு தங்கள் படிப்பை மேம்படுத்த இரண்டு சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

மேலும், திருகோணமலை மாவட்டத்தில் ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் சிறந்த பெறுபேறு பெற்ற ஸ்ரீ ஷண்முக பெண்கள் கல்லூரியைச் சேர்ந்த செல்வி சந்தியா பார்த்திபனுக்கு பரிசும் இதன்போது வழங்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X