2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

திருகோணமலை பேருந்து நிலையத்தில் இருவர் கைது

Freelancer   / 2023 மார்ச் 21 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை பேருந்து நிலையத்தில் வைத்து ஜெல் குச்சிகளை வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர்கள் முச்சக்கரவண்டியில் பயணித்த போதே சிக்கியுள்ளதுடன், 58 வோட்டர் ஜெல் குச்சிகள் இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, 100 டெட்டனேட்டர்களையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள், 33 மற்றும் 34 வயதுடைய நிலாவெளி மற்றும் திருகோணமலை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சந்தேகநபர்கள் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .