Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 14 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொன் ஆனந்தம்
திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் மணல் அகழ்வுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
நாளையிலிருந்து (15) அமுலுக்கு வரும் வகையில் இரண்டு வாரங்களுக்கு இத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அசேல இத்தவல தெரிவித்துள்ளார்.
மணல் அகழ்வுக்காக அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்ட போது, இடம்பெற்றுள்ள மோசடிகள், முரண்பாடுகள் தொடர்பில், விசேட விசாரணையை முன்னெடுக்குமாறு, ஜனாதிபதி விடுத்துள்ள அறிவுறுத்தலுக்கமையவே இத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த விசாரணைகளின் பின்னர் அடுத்த மாதம் முதலாம் திகதியிலிருந்து மணல் அகழ்வை முன்னெடுக்க அனுமதியளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
37 minute ago
57 minute ago
1 hours ago