Princiya Dixci / 2021 ஜனவரி 17 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக், அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை மாவட்டத்தில் அன்டிஜன் பரிசோதனை மற்றும் நேற்று (16) மாலை பிசிஆர் அறிக்கையின்படி, 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தின் தொற்று விவரம் தொடர்பில் அவரால் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட பகுதியில் இம்மாதம் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் பெறப்பட்ட பிசிஆர் அறிக்கையின்படி 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இம்மாதம் 10ஆம் திகதி பெறப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் படி மூன்று பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், கிண்ணியாவில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.
அத்துடன், திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரிவில் 145 பேருக்கு அன்டிஜன் பரிசோதனைகள் நேற்று மேற்கொள்ளப்பட்டதாகவும் அதில் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 48 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் 78 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் மூலம் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
14 minute ago
17 minute ago
28 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
17 minute ago
28 minute ago
32 minute ago