Editorial / 2018 மார்ச் 12 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமலை ராஜ்குமார்
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காந்திநகர் கிராமத்தில் அசீட் வீச்சும் வாள் வெட்டுச் சம்பவமும், கடந்த புதன்கிழமையன்று இடம்பெற்றுள்ளது.
தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இளைஞன் ஒருவருக்கு அவருடைய வீட்டுக்கு முன் வைத்து அசீட் வீசப்பட்டுள்ளது.
அதனைக் கண்ணால் கண்ட அவருடைய சகோதரர்கள் அசீட் வீசிய நபரைத் துரத்திச் சென்று கையும் மெய்யுமாக பிடித்த போது, குறித்த நபரைக் காப்பாற்ற வந்த குழு, வாள் மற்றும் கூறி ஆயுதங்களுடன் வந்து, இருவரை தரமாறியாக வெட்டி விட்டு, அசீட் வீசிய நபரைக“ காப்பாற்றிச் சென்றுள்ளது.
இது தொடர்பாக உப்புவெளிப் பொலிஸி நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனினும், சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைதுசெய்யப்பட்டவில்லை.
இச்சம்பவத்தில் பாதிக்கபட்டவர்கள், திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .