Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஏப்ரல் 20 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
திருகோணமலையில் நேற்று மாலையிலிருந்து பொதுமக்கள் வீதியை மறித்து, டயர்களை எரித்து அரசாங்கத்திற்கெதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டம் இன்றும் (20) தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற் காரணமாக திருகோணமலை - கண்டி பிரதான வீதியான அபயபுர சுற்று வளைவு சந்தியில் மூன்று பக்கமாகவும் ஆர்ப்பாட்டகாரர்களால் வீதித் தடை போடப்பட்டு மறிக்கப்பட்டுள்ளன.
திருகோணமலை - கண்டி பிரதான வீதியில் பேரூந்து ஒன்றினை வீதிக்கு குறுக்கே நிறுத்தி உப்புவெளி பகுதிக்குச் செல்லும் வீதியும் மறிக்கப்பட்டுள்ளது.
கடைகள் , மற்றும் மத்திய மீன் சந்தை மூடப்பட்டு காணப்படுகின்றது.அத்தோடு திருகோணமலை மணிக்கூட்டு கோபுரச் சந்தியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் திருகோணமலை நகரிலுள்ள அரச அலுவலகங்களுக்கு இன்று காலை, தொழில் நிமிர்த்தம் சென்ற பலரும் திருப்பி அனுப்பப்பட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.
தொடர்ந்தும் திருகோணமலையில் வீதித்தடைகள் போடப்பட்டு ஆர்ப்பாட்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. (R)
54 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
2 hours ago