Editorial / 2018 செப்டெம்பர் 12 , பி.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமலை ராஜ்குமார், ஹஸ்பர் ஏ ஹலீம்
திருகோணமலை, தம்பலகாமம் பகுதியில் ஏற்பட்ட அவசர திருத்த வேலை காரணமாக கடந்த 7ஆம் 8ஆம் திகதியில் நீர்வெட்டு அமுலில் இருக்கும் என அறிவித்து ஒருவார காலமாகியும் சீரான நீர்விநியோகம் இல்லாமையினால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தினை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக, இன்று (12) நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையிணை தொடர்புக் கொண்டபோது தாம் திருத்த வேலையை மேற் கொண்டு கடந்த 10 ஆம் திகதி நீர் விநியோகத்தை ஆரம்பித்த போதும் நீர் அழுத்தம் குறைவாக காணப்பட்டதால், பல இடங்களுக்கு நீர் கிடைக்கவில்லை. மேலும் நேற்று (11) மீண்டும் குளாயில் நீர் கசிவு ஏற்பட்டமையினால், நீர்விநியோகம் மீண்டும் தடைப்பட்டுள்ளது. இப்பணிகளை விரைவில் நிறைவு செய்ய முயற்சித்து வருவகின்றோம்.
மேலும், குடிநீர் மிக அவசரமாக தேவைப்படும் பகுதிகளுக்கு தாம் நீர் பௌசர்கள் மூலமாக குடிநீர் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்கள்.
திருகோணமலை, நகர் மக்கள் தேசிய வடிகான் சபையின் குடிநீர் இணைப்பையே சகல தேவைகளுக்கும் நம்பியுள்ள நிலையில், இரண்டு நாட்களென அறிவித்து ஒருவாரம் வரை நீர்விநியோகம் சீரின்மையினால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர் எனவே இது தொடர்பில், துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கோருகின்றனர்.
15 minute ago
19 minute ago
20 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
19 minute ago
20 minute ago
33 minute ago