2025 மே 02, வெள்ளிக்கிழமை

திருகோணமலையில் பெளர்ணமி தின விழா

Editorial   / 2019 ஜூலை 11 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 அ . அச்சுதன்  

'நீங்களும் எழுதலாம்' வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் பெளர்ணமி தின விழா திருகோணமலை ரி.டி.டி.ஏ. மண்டபத்தில் எதிர்வரும் 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணிக்கு 'நீங்களும் எழுதலாம்' ஆசிரியர் கவிஞர் எஸ். ஆர். தனபாலசிங்கம் தலைமையில் நடைபெறவுள்ளது.

கேட்பார் இல்லையோ?  என்னும் தலைப்பில் கவிஞர் செ. ஞானராசா தலைமையில் நடைபெறும் சிறப்பு கவியரங்கில் கவிஞர்களான நிலாவெளியூர் கெஜதர்மா,  க. யோகானந்தன், யூட்பேக்மன், திருமதி சௌ. சந்திரகலா, திருமதி சிவரமணி ஆகியோர் பங்குபற்றுவர்.

மேலும் விழாவை சிறப்பிக்கும்முகமாக இன்றைய சூழ்நிலையில் தமிழ் மக்களின் உண்மையான எதிர்பார்புக்கள் எவை?  என்னும் தலைப்பிலான உரையரங்கை திருகோணமலை மாவட்ட அபிவிருத்திச்சங்கத் தலைவர் எஸ். லக்ஸ்மணன் தொடக்கிவைக்க ஊடகவியலாளர்களான திருமலை நவம்,  பொன். சற்சிவானந்தம் , அரசியல் விமர்சகர் ஆ .யதீந்திரா ஆகியோர் உரையாற்றுவர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X