2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

திருக்கோணேஸ்வரர் குறித்து கரிசனை

Princiya Dixci   / 2020 ஒக்டோபர் 06 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை, திருக்கோணேஸ்வரர் கோவிலின் பாதுகாப்புத் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் திருகோணமலைக்கு நேற்று (05)மாலை விஜயம் மேற்கொண்டு, கோவில் நிர்வாகி அருள் சுப்ரமணியத்துடன்  கலந்துரையாடினர்.  

இந்தச் சந்திப்பின்போது, திருக்கோணேஸ்வரர் கோவில் எதிர்நோக்கும் தற்போதைய பிரச்சினைகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அவை தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டறிந்துகொண்டனர்.  

அத்தோடு, கோவிலின் பாதுகாப்பு, தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகள், தொடர்பாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டறிந்தனர்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X