2025 மே 13, செவ்வாய்க்கிழமை

திருடன் கைது

Editorial   / 2017 ஒக்டோபர் 28 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீஷான் அஹமட் 

திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலீம்நகர் பகுதியில் உள்ள வீடொன்றை நேற்று (27) இரவு உடைத்து 15 ஆயிரம் ரூபாய் பணத்தைத் திருடிய 58 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை இன்று (28) காலை கைது செய்துள்ளதாக, மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர்கள் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது சூட்சுமமான முறையில் உள் நுழைந்த இந்நபர், மறைத்து வைத்திருந்த மேற்படி தொகையை திருடியுள்ளதாக தெரிய வருகின்றது. வீட்டு உரிமையாளர் செய்த முறைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு விசாரணை செய்தபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், இவரை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X