2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

திருட்டு குற்றச்சாட்டில் இருவர் கைது

தீஷான் அஹமட்   / 2017 டிசெம்பர் 26 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூதூர் பிரதான வீதியிலுள்ள புடவைக் கடையொன்றின் கூரையைப் பிரித்து, அங்கிருந்து 8 இலட்சத்தி 65 ரூபாய் பணத்தைத் திருடிய குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் இருவர், நேற்று (25) மூதூர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற இந்தத் திருட்டுச் சம்பவம் குறித்து கடை உரிமையாளரால் நேற்றுக் காலை செய்த முறைப்பாட்டை அடிப்படையாக கொண்டு மேற்கொண்ட விசாரணையின் போதே, சந்தேகநபர்கள் இருவரும் நேற்று மாலை கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும், மூதூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை, மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X