2025 மே 13, செவ்வாய்க்கிழமை

திருமலையில் சுனாமி எச்சரிக்கை ஒத்திகை

Editorial   / 2017 நவம்பர் 04 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

தேசிய ரீதியாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் நடத்தப்படவிருக்கும் சுனாமி ஒத்திகை நிகழ்வானது, கிண்ணியாவிலும் நாளை (05) நடைபெறவுள்ளதாக, கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் தெரிவித்தார்.

தேசிய ரீதியாக 77 இடங்களில் இவ் ஒத்திகை நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக கிண்ணியா அல்ஹிரா மகாவித்தியாலயத்தில் நாளை 02 மணி தொடக்கம் இவ் ஒத்திகை நிகழ்வு ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதில் மாஞ்சோலைச் சேனை கிராம உத்தியோகத்தர் பிரிவு, மாஞ்சோலை, மஹ்ரூப் நகர், அண்ணல்நகர் போன்ற கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைக் கொண்ட தெரிவுசெய்யப்பட்ட நபர்கள் பங்குபற்றுமாறும் இதற்கான அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.

எனவே, இச்சமிக்ஞையின்போது பாதுகாப்பான வீதியூடாக அல்ஹிரா பாடசாலைக்கு வருதல் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீணாண வதந்திகளைப் பரப்பவேண்டாம் எனவும் இது வழமையாக ஒவ்வொரு வருடமும் நடைபெறும் ஒத்திகையொனவும் தெரிவிக்கப்படுகிறது எனவும் கிண்ணியா பிரதேச செயலகம், பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X