Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜூலை 23 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ . அச்சுதன்
1983 ஆண்டு யூலை மாதம் 25,27ம் திகதிகளில் வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)ஸ்தாபக தலைவர்களான தலைவர் தங்கத்துரை,தளபதி குட்டிமணி,முன்னணி போராளிகள் உட்பட 53போராளிகளின் நினைவாக நடைபெறும் தமிழ் தேசிய வீரர்கள் தினத்தை வடக்கு,கிழக்கில் டெலோ இயக்கம் அனுஷ்டித்து வருகின்றது.
நாளை 25ம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 5 .00 மணிக்கு திருகோணமலை வெலிக்கடை தியாகிகள் நினைவரங்கில் தீபம் ஏற்றி நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளதாக ரெலோவின் நிர்வாக செயலாளர் நித்தி மாஸ்டர் தெரிவித்தார்.
இந் நிகழ்விற்கு ரெலோவின் தவிசாளரும்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய எம்.கே. சிவாஜிலிங்கம் உட்பட ரெலோவின் முக்கிய பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இதேவேளை, இறுதிநாள் நினைவேந்தல் எதிர்வரும் 27ம் திகதி ரெலோவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் முல்லைத்தீவில் நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .