Janu / 2025 ஜனவரி 05 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளீன் ஸ்ரீலங்கா எனும் தொனிப்பொருளில் திருகோணமலை நகரை தூய்மைப்படுத்தும் செயற்திட்டம் திருகோணமலை நகராட்சி மன்ற செயலாளர் தே.ஜெயவிஷ்னு தலைமையில் 2025ம் ஆண்டு தை மாதம் முதலாம் திகதி தொடக்கம் நகராட்சி மன்றம் தனது சேவையை விஸ்தரிக்கும் முகமாக விசேட பணிக்குழு (Revenu, Disaster and Development Task force) ஊடாக செய்து வருகிறது.
அதன் ஒரு கட்டமாக வெள்ளிக்கிழமை (03) அன்று முதல் ஊழியர்கள் பேருந்து தரிப்பு நிலையங்களை சுத்திகரித்து இருக்கைகள் மற்றும் கைப்பிடி கம்பங்களை வர்ணம் பூசி புதுப்பொலிவு படுத்தி வருகின்றனர்.
இந்த வேலைகளை ஊழியர்கள் இரவு பகல் பார்க்காமல் செய்து வருவதுடன் வீதிகளில் திரியும் கட்டாக்காலி மாடுகளை பிடிக்கின்ற வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
அ . அச்சுதன்




அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .