2025 மே 06, செவ்வாய்க்கிழமை

தென்கொரியா பயணம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 22 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக், ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியா வலய கணினி வள நிலையத்தில் முகாமையாளராகக் கடமையாற்றும் ஜே.இம்தியாஸ் ஆசிரியர், தென்கொரியாவின் குவாங்ஜு நகரில் நடைபெறவுள்ள தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மேலதிகப் பயிற்சிக்காக, எதிர்வரும் 26ஆம் திகதி பயணமாகவுள்ளார்.

கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இருவரில் ஒருவராக, கிண்ணியாவைச் சேர்ந்த இவர் இப்பயிற்சிக்காகச் செல்கிறார். இப்பயிற்சிக்காக, இலங்கையிலிருந்து மொத்தமாக 24 பேர் பயணமாகவுள்ளனர். இவர்களுக்கான விமானப் பயணச்சீட்டுகள், கல்வி அமைச்சில் வைத்து கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தால், நேற்று (21) வழங்கி வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X