Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2018 பெப்ரவரி 07 , பி.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
கிண்ணியாவின் மட்டக்களப்பு - திருகோணமலையில் பிரதான வீதியில் காணப்படும் 398 மீற்றர் நீளத்தையுடைய கடல் மேல் பாலத்தில் பொருத்தப்பட்ட வீதி மின்விளக்குகள், கடந்த ஒரு வாரமாக ஒளிர்வதில்லை என, பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதனூடாக நாளாந்தம் பல நூற்றுக்கணக்கான வாகனங்கள் பயணம் செய்கின்றன.
இருளில் மூழ்கடித்துக் காணப்படும் இப்பாலத்தால், வீதி விபத்துகள் ஏற்படுவதற்கு சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது தேர்தல் காலமாகக் காணப்படுவதால், இதனூடாகவே இரவு நேரங்களில் அதிக வாகனங்கள், திருகோணமலையை நோக்கியும் திருகோணமலையிலிருந்து கிண்ணியா, மூதூர், மட்டக்களப்பு நோக்கியும் செல்கின்றன.
எனவே, தேர்தலுக்கு முன்பு இப்பாலத்து வீதி மின்விளக்குகளை, மிக அவசரமாக ஒளிரவைப்பதற்கு, உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு, பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
45 minute ago
1 hours ago
2 hours ago