2025 மே 08, வியாழக்கிழமை

தேர்தல் தொடர்பில் திருகோணமலையில் 120 முறைப்பாடுகள் பதிவு

Editorial   / 2018 ஜனவரி 27 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

எதிர்வரூம் 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில், திருகோணமலை மாவட்டம் முழுவதிலும் இருந்து, 120 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக, திருகோணமலை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் சஜீத் வெல்கம தெரிவித்தார்.

வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட தினத்திலிருந்து இன்றுவரை , குறித்த முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.

இவ்வாறான முறைப்பாடுகள் தொடர்பில், தேர்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக தராதரம் பாராது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெறும் தேர்தல்கள் தொடர்பான முறைப்பாடுகளை  ஆராய்ந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X