Princiya Dixci / 2020 நவம்பர் 29 , பி.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட்
தாம் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருவதுடன், மன உளைச்சலுக்கு உட்படுத்தப்படுத்தப்படுவதாக வெளிநாட்டில் பட்டம் முடித்த இலங்கை வெளிநாட்டுப் பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் மஹ்ரூப் முஸம்மில் தெரிவித்தார்
இலங்கை வெளிநாட்டு பட்டதாரிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், கிண்ணியா - பொது நூலக மண்டபத்தில் இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார் .
அவர் இங்கு தொடர்ந்தும் கருத்துரைக்கையில், “வெளிநாட்டுப் பட்டதாரிகளாக எங்களுக்கு தொடர்ச்சியான புறக்கணிப்பு நடப்பதனால் தாம் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றோம். எமது நியமனம் தொடர்பில் ஜனாதிபதி அதிக கவனம் எடுத்து, நியமனத்தை விரைவில் வழங்க வேண்டுமென எதிர்பார்க்கின்றோம்” என்றார்.
இடைநிறுத்தப்பட்ட நியமனத்தை எமக்கு மீண்டும் வழங்குமாறும் இவற்றில் உள்நாட்டு, வெளிநாட்டு பட்டம் என்று பாராமல் பட்டம் முடித்தவர்களுக்கு நியமனம் வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.
குற்த ஒன்றியத்தின் செயலாளர் முஹம்மட் அலி பைரூஸ் உட்பட பட்டதாரிகள் பலர் இதில் கலந்துகொண்டனர்.
9 minute ago
26 minute ago
32 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
26 minute ago
32 minute ago
2 hours ago