Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜனவரி 09 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக், ஹஸ்பர் ஏ ஹலீம்
தொற்றா நோயை இலங்கையில் இருந்து முற்றாக ஒழிப்பதற்காக, உலக வங்கியுடன் இணைந்து, சுகாதார அமைச்சு, 05 வருட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக, சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்தார்.
இதற்கான பூர்வாங்க வேலைகள் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், இவ்வருடம் மாகாணங்களுக்கு இது விஸ்தரிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனை கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை, சுகாதார இராஜாங்க அமைச்சர் தலைமையில், திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் 11ஆம் திகதியும் சம்மாந்துறையில் 12ஆம் திகதியும் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
இது தொடர்பான பேச்சுவார்த்தை இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமுக்கும் உலக வங்கிப் பிரதிநிதிகளுக்குமிடையில், சுகாதார அமைச்சின் இராஜாங்க அமைச்சரின் அலுவலகத்தில் நேற்று (08) இடம்பெற்றது.
உலக வங்கியின் 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்படும் இந்த வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியிலுள்ள 550 வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதற்கமைய, ஒவ்வோர் ஊர்களிலும் உள்ள 35 வயதுக்கு மேற்பட்டவர்கள், வைத்திய சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்கள் தொற்றா நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், உரிய சிகிச்சைகளை வழங்கி அவர்களைக் குணப்படுத்துவதே, இந்த வேலைத் திட்டத்தின் நோக்கமாகும்.
இதேவேளை, குறிப்பிட்ட வைத்தியசாலைகளில் வைத்திய வசதிகள், கட்டடங்கள் இல்லாவிட்டால் அந்தக் குறைகளும் இந்தத் திட்டத்தின் ஊடாக நிவர்த்தி செய்யப்படும்.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago