Princiya Dixci / 2020 டிசெம்பர் 27 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் மற்றும் தாதி உத்தியோகத்தர்கள் வெளி மாவட்டங்களுக்கு சென்று வருவதாலேயே கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் வைத்திய நிபுணர்கள் வாரத்துக்கு ஒரு முறை கொழும்பு, கம்பஹா மாவட்டங்களுக்குச் சென்று வருவதாகவும் இவர்களுக்கு பிசிஆர் மற்றும் அன்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை எனவும் சிற்றூழியர்களுக்கு மாத்திரம் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த இரு வைத்தியருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், மூதூர் வைத்தியசாலையில் குடும்பநல உத்தியோகத்தர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் வெளியிடங்களுக்கு சென்று வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதனால் திருகோணமலை மக்களுக்கு தொற்று பரவும் அபாயம் அதிகளவில் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக, சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.
எனவே, இக்காலப்பகுதியில் வெளி மாவட்டங்களுக்குச் சென்று வரும் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் சமூக அக்கறையுடன் செயற்பட வேண்டும் எனவும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மதிக்க வேண்டும் எனவும் திருகோணமலை பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் இன்று (27) திகதி வரை கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 120 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
9 minute ago
26 minute ago
32 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
26 minute ago
32 minute ago
2 hours ago