2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

தொழில்நுட்பப் பிரிவுக்கு அனுமதி

ஒலுமுதீன் கியாஸ்   / 2018 பெப்ரவரி 18 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தில் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பிரிவில் தொழில்நுட்பப் பாடத்துறையை ஆரம்பிப்பதற்கு, கிழக்கு மாகாண கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பக் கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கான அனுமதிக் கடிதத்தை, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ. எம். ஜி. திசநாயக்க, பாடசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களக் கட்டமைப்புக் குழுவால் மேற்கொள்ளளப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தில் 2017.01.01ஆம் திகதியில் இருந்து உயர் தரப் பிரிவில் தொழில்நுட்பப் பாடத் துறையை ஆரம்பிப்பதற்கு அமைச்சால் அனுமதி வழங்கப்படுகிறது என, அது தொடர்பாக வழங்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி , கிண்ணியா கல்வி வலயத்தில், பெண்கள் பாடசாலையொன்றில் தொழில்நுட்பப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றமை முக்கியமாகக் கருதப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X