தீஷான் அஹமட் / 2018 டிசெம்பர் 13 , பி.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, தோப்பூர், புலியங்குளம் பகுதியிலுள்ள முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான 125 ஏக்கர் வயல் காணிகளில், பெரும்பாண்மை இனத்தவர்கள் சிலர் அத்துமீறி வேளாண்மை செய்யதாக, பாதிக்கப்பட்ட மக்களால் முறையிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த இடத்துக்கு சேருநுவர பிரதேச செயலாளர் ஜயரட்ண, இன்று (13) காலை நேரடியாக வந்து நிலைமைகளைப் பார்வையிட்டதோடு, இரு தரப்பினருடன் கலந்துரையடலில் ஈடுபட்டார்.
மிக விரைவில் அறிவிக்கும் போது, இரு தரப்பினரும் வருகை தந்து தன்னிடம் தங்களிடமுள்ள ஆதாரங்களைக் காட்டுமாறும் அவர் பணிப்புரை விடுத்தார்.
அதற்கிடையில் இரு தரப்பினரும் அமைதியாக இருக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
மேற்படி காணிகளுக்கு முஸ்லிம் மக்களிடம் ஆதாரங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், 1971ஆம், 1981ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரமுள்ள காணிகளில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிலர் வேளாண்மை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
12 minute ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
5 hours ago
9 hours ago