2025 மே 02, வெள்ளிக்கிழமை

தோப்பூர் சந்தையை அபிவிருத்தி செய்யுமாறு கோரிக்கை

Editorial   / 2019 ஏப்ரல் 21 , பி.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எல்.நௌபர்

திருகோணமலை, மூதூர் பிரதேசசபைக்கு உட்பட்ட தோப்பூர் பொதுச்சந்தை, எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி இயங்கி வருவதாக, பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், தோப்பூர் வாராந்த சந்தையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

சந்தையில் கட்டட வசதிகள் இல்லை என்றும் இதனால் வெட்ட வெளியில் படங்குகளைக் கட்டியவாறும் தெருவில் பொருட்களை பரப்பியவாறுமே, தோப்பூர் பொதுச் சந்தையில், வியாபார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் இச்சந்தையில், மலசலகூட வசதிகள் இல்லை என்றும் இதனால் சந்தைக்கு வரும் பொதுமக்களும் சந்தை வியாபாரிகளும் பாரிய சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சந்தையானது, 1990ஆம் ஆண்டு, நாட்டில் நிலவிய யுத்தத்தால் அழிந்து தரை மட்டமானது. அதன் பின்னர் எவ்வித அபிவிருத்திகளும் இன்றியே, சந்தை இயங்கி வருவதாகவும் எனவே, சந்தையை அபிவிருத்திச் செய்வதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றும், பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X