Suganthini Ratnam / 2016 ஜூன் 01 , மு.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தீசான் அஹமட்
திருகோணமலை, தோப்பூர் இக்பால் நகர் பகுதியைச் சேர்ந்த நான்கரை வயதுடைய பைறூஸ் ஆசிக் என்ற சிறுவனின் நாக்கில் இரண்டு இஞ்சி அளவுடைய கம்புத் துண்டு ஒன்று குத்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அவ்வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சிறுவன் செவ்வாய்க்கிழமை (31) மாலை ஓடி விளையாடிக்கொண்டிருந்தபோது, விழுந்துள்ளான். இதன்போதே, இவனது நாக்கில் அங்கிருந்த சிறிய கம்புத் துண்டு குத்தியுள்ளது.
தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்;ட இந்தச் சிறுவன், மேலதிக சிகிச்சைக்காக மூதூர் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளான்.
குறித்த சிறுவனின் நாக்கில் கம்பு ஏறியதால் கதைக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
19 minute ago
20 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
20 minute ago
37 minute ago