Niroshini / 2017 ஜனவரி 07 , மு.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தீஷான் அஹமட்
அன்று தொடக்கம் இன்று வரை இந்து ஆலயங்கள் மீதான தாக்குதல்கள் விஷமிகளால் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இச் செயற்பாடு நல்லாட்சி அரசாங்கத்திலும் தொடர்கின்றது என்றால் வேதனைக்குரிய விடயமாகும் என மூதூர் பிரதேச இந்து குருமார் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அச்சங்கம் இன்று வெளியிடப்பட்டுள்ள கண்டன ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“இந்து ஆலயங்களை சேதப்படுத்துகின்ற விஷமிகளை பொலிஸாரினால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொன்னால் அது வேடிக்கயாகவே உள்ளது. காரணம் அரச பாதுகாப்பு படைகளுக்கு இலங்கையில் எந்த பகுதியும் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாகவே உள்ளது. எனவே இதை இந்த நல்லாட்சி அரசாங்கமானது கண்டுபிடித்தே ஆகவேண்டும்.
இன்று இலங்கை நாடாளுமன்றதில் தமிழ் பேசும் இந்து மதத்தை சார்ந்த அரசியல்வாதிகள் இருந்தும் இவ்வாறான செயங்பாடுகளில் ஈடுபடுபவர்களை கண்டுபிடித்து தண்டிக்கவில்லை என்றால் வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.
எனவே, இனிமேலும் தாமதிக்காமல் அரசாங்கம் விரைவாக இந்த நாசகார சக்திகளை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
5 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 Dec 2025