2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

நாடாளுமன்ற அங்கத்துவம் வழங்குமாறு மூதூர் ஆதிவாசிகள் கோரிக்கை

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 12 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீஷான் அஹமட்

ஆதிவாசிகள் சமூகத்தின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவும் அப்பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்காகவும்  தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்தில் தமக்கும் அங்கத்துவம் வழங்குமாறு மூதூர் பிரதேச ஆதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூதூர் கிழக்குப் பகுதியில் வசித்து வரும் ஆதிவாசிகளுக்கும் ஆதிவாசிக் குடிகளுக்கான இணைப்பாளர் கே.சி.சிறிலாலுக்கும் இடையிலான சந்திப்பு, பாட்டாளிபுரம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை (11) மாலை நடைபெற்றது. இதன்போதே, அவர்கள் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளனர்;.

தங்களது வாழ்வாதாரத் தொழிலாக தேன் எடுத்து விற்பனை செய்தல், காடுகளில் விறகு வெட்டுதல் உள்ளிட்டவை காணப்படுகின்றன. இத்தொழில் நடவடிக்கைகளில் தாங்கள் ஈடுபடும்போது, இவற்றைச் சட்டவிரோதமானது எனக் கூறி பொலிஸார் தங்களைக் கைதுசெய்யும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.

மேலும், மூதூர் கிழக்கு ஆதிவாசிகள் சங்கத்தை தாம் நிறுவியுள்ளதாகவும் அச்சங்கத்தின் மூலம் தமது உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கையில் தாம் ஈடுபடவுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.  

அத்துடன், தேர்தல் காலத்தில் மாத்திரம் தங்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக தங்களை நாடிவரும் அரசியல்வாதிகள், அவர்களின் தேவை பூர்த்தியாகியவுடன் தங்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கான எதுவித நடவடிக்கையையும் எடுப்பதில்லை எனவும் அவர்கள் கூறினர்.

எனவே, தங்களின் பிரச்சினைகளையும் கவனத்திற்கொண்டு தீர்த்து வைக்குமாறும் மூதூர் பிரதேச ஆதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .