2025 மே 16, வெள்ளிக்கிழமை

நான்கு வெவ்வேறு விபத்துக்களில் அறுவர் காயம்

Thipaan   / 2017 மார்ச் 03 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை மாவட்டத்தின் மூன்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற நான்கு விபத்துக்களில் அறுவர் படுகாயமடைந்து, திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று (03) அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.

குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலாவெளி, இக்பால் நகர் பகுதியைச்சே ர்ந்த 29 வயதுடைய இளைஞன் மோட்டார் சைக்கிளில் சென்று மதகுடன்  மோதிப் படுகாயமடைந்துள்ளார்.

கன்னியா, 06ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள், மோட்டார் சைக்கிளில் வேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில், அதே இடத்தைச்சேர்ந்த 16வயது மற்றும் 17வயதுடையவர்கள் காயமடைந்துள்ளனர் என, உப்புவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.

துறைப் முகப் பொலிஸ் பிரிவில், கார் -மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் காயமடைந்துள்ளதுடன், காரின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

 மோட்டார் சைக்கிள்கள் இரண்டு நேருக்கு நேர் மோதியதில், இரண்டு பேர் காயமடைந்துள்ளனர், அதிலொருவர் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்துக்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .