Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்
சுகாதார அமைச்சால் வழங்கப்படவுள்ள நியமனங்களில் தங்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் சுகாதாரத் தொண்டர்களாக கடமையாற்றி வந்த ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் ஆகியோரை கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் சுகாதாரத் தொண்டர்களாக கடமையாற்றி வந்த ஊழியர்கள் இன்று புதன்கிழமை சந்தித்து தங்களின் பிரச்சினைகளை முன்வைத்தனர்.
இதன்போது, சுமார் 200 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள வைத்தியசாலைகளில் கடந்த ஒன்பது வருடங்களாக தாங்கள் எந்தவித ஊதியமும் பெறாமல் கடமையாற்றி வந்ததாகவும் அந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதற்கான சகல நடவடிக்கையை முன்னெடுப்பதாக இவர்களிடம் கிழக்கு மாகாண முதலமைச்சரும்; சுகாதார அமைச்சரும் தெரிவித்தனர்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026