Princiya Dixci / 2016 மார்ச் 30 , மு.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, மூதூர் பிரதேசத்தில் வீடொன்றில் நகைகளைத் திருடிய சந்தே நபரொருவரை, ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான், நேற்று செவ்வாய்கிழமை (29) உத்தரவிட்டார்.
மூதூர், நடுத்தீவுப் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர், நடுத்தீவு பிரதேசத்தில் யாருமற்ற வீட்டில் திருடியுள்ளதாக வீட்டு உரிமையாளரால் செய்த முறைப்பாட்டையடுத்து அவரைப் கைதுசெய்ததாகவும், குறித்த நபருக்கெதிராக திருட்டு குற்றச்சாட்டு வழக்கொன்று நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபரை, மூதூர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago