2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

நகர சபை உறுப்பினர் மதில் மேல் போராட்டம்

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 09 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

கிண்ணியா நகர சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூதூர் தொகுதிக்கான கொள்கை பரப்புச் செயலாளருமான எம்.எம் மஹ்தி, கிண்ணியா நகர சபையின் மதில் மேல் ஏறி, தனிநபர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் இன்று (09)  ஈடுபட்டுள்ளார்.

கிண்ணியா, எழில் அரங்கு மைதானத்தின் நீர் இணைப்பு, மின் இணைப்பு ஆகியன கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் புனரமைப்பு பணிகள் நடைபெறுகின்ற போது, ஒப்பந்தக்காரர்களால் பாவிக்கப்பட்டு, நிலுவை காரணமாக துண்டிக்கப்பட்டுள்ளன.

துண்டிக்கப்பட்ட நீர் இணைப்பையும் மின் இணைப்பையும் பெற்றுத்தருமாறு கோரிக்கை வைத்து நகர சபையிலே பல பிரேரணைகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்தும் இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் இதனால் மைதானத்தில் விளையாடுகின்ற வீரர்கள் பாரிய சிரமங்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றனர் எனவும்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிண்ணியா நகர சபை உறுப்பினர் மஹ்தி தெரிவித்தார்.

எனவே, துண்டிக்கப்பட்ட நீர், மின் இணைப்புகளை விரைவாக பெற்றுத்தருமாறு அவர் கோரிக்கையை முன்வைத்து, மேற்படி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 

இக்கோரிக்கையானது விரைவாக நிறைவேற்றப்படாவிட்டால், எதிர்வரும் நாட்களில் மக்களைத் திரட்டி, பாரிய எழுச்சி போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அவர் இதன்போது எச்சரித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X