Sudharshini / 2016 பெப்ரவரி 20 , மு.ப. 07:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ்
திருகோணமலை மாவட்டத்தில் நிலவிவரும் குடி நீர்ப்பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் பொருட்டு, தேசிய நீர் வழங்கல் வடிவாலமைப்புச் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் சேவை எதிர்வரும் மார்சு மாதம் 2ஆம் திகதி காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 அணி வரை திருகோணமலை, கண்டி வீதி, இலக்கம் 48ஏஃ1 இல் அமைந்துள்ள கிழக்கு மாகாண நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபையின் பிரதேச சேவை நிலையத்தில் நடைபெறவுள்ளதென நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபையின் திருகோணமலை மாவட்ட பிராந்திய முகாமையாளர் தெரிவித்தார்.
இந்த நடமாடும் சேவையில் குடிநீர் தொடர்பான பிரச்சினைகளை முன்வைத்து தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் உடனடியாக தங்கள் பிரச்சினைகளை நேரடியாகவோ, தபால் மூலமாகவோ அல்லது பெக்ஸ் (0262225383) முலமாகவோ நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபையின் அந்தந்த பிரதேச சேவை நிலையங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் பிரச்சினைகள் தொடர்பில், நடமாடும் சேவை தினத்தன்று தாங்கள் சந்திக்க வேண்டிய பொறுப்பதிகாரிகள் மட்டும் அதற்கான அனுமதி இலக்கங்கள் என்பன வழங்கப்படவுள்ளன.
இந்த நடமாடும் சேவவையின் போது சம்மந்தப்பட்ட அமைச்சர், பணிப்பாளர்கள், நிறைவேற்றதிகாரிகள், தவிசாளர்கள் உட்பட பொறுப்பு வாய்ந்த அனைவரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026