2025 ஜூலை 31, வியாழக்கிழமை

நடமாடும் சேவையை நடத்த ஏற்பாடு

Kogilavani   / 2016 ஜூலை 15 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்

ஆயுர்வேத வைத்திய சான்றிதழை புதுப்பித்தல் மற்றும் பரம்பரை வைத்தியர்களை பதிவு செய்வதற்கான நடமாடும் சேவையை கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் மேற்கொள்ள உள்ளது.

திருகோணமலை, கல்முனை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் தனித்தனியாக இந்நடமாடும் சேவை  நடத்தப்பட உள்ளது.

இந்த நடமாடும் சேவையில் பரம்பரை வைத்தியர்களை பதிவு செய்தல்,  அவர்களுக்கான அடையாள அட்டையை  விநியோகித்தல்,  அவர்களது பதிவுகளை மீள புதப்பித்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

எதிர்வரும் 22ஆம் திகதி திருகோணமலையில் முதலமைச்சரின்;  கேட்போர்கூடத்திலும், 23ம் திகதி  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையிலும், 24ஆம் திகதி மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திலும் இந்நடமாடும் சேவைகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக   கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள  நிர்வாக உத்தியோத்தர் தெரிவித்தார்.

இது தொடர்பிலான மேலதிக விபரங்களை 026 2225640 மற்றும் 026 2225995 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பெற்றுகொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .