2025 மே 08, வியாழக்கிழமை

நடமாடும் சேவை மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு

Editorial   / 2018 ஜனவரி 30 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ் அப்துல் ஹலீம், ஹஸ்பர் ஏ ஹலீம்

கிண்ணியா கல்வி வலயத்துக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை கோட்டக்கல்விப் பிரிவை உள்ளடக்கிய சுமார் 15 பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள், சிற்றூழியர்களுக்கான நடமாடும் சேவை, முள்ளிப்பொத்தானை அல்ஜூனியர் பாடசாலையில் இன்று (30) இடம்பெற்றது.

இதன்போது ஆசிரியர்கள் அதிபர்களின் பதவி உயர்வு, ஓய்வூதியம், சம்பள  உயர்வு, சம்பள நிலுவை உட்பட அவர்கள் எதிர்நோக்கும் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பிலும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இதில் 250க்கும் மேற்பட்ட அதிபர்கள், ஆசிரியர்கள், சிற்றூழியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, தங்களது பிரச்சினைகள் தொடர்பில் தெளிவான ஆலோசனைகளைப் பெற்றுக் கொணடனர்.

இதன்போது, பிரதம வளவாளராக கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி இஸட்.எம்.முனவ்வரா நளீம், வலயக் கல்வி அலுவலக நிர்வாக உத்தியோகத்தர் திரு.ஜெம்சீத் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X