2025 மே 06, செவ்வாய்க்கிழமை

நடுஊற்றுக் கிராமம் அழியும் அபாயம்

Editorial   / 2018 செப்டெம்பர் 03 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை, கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவிலுள்ள நடுஊற்றுக் கிராமத்தில் கிரவல் அகழ்வதால், பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருவதாக, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இக்கிரவல் அகழ்வானது, மக்கள் குடியிருப்புகளை அண்டிய பகுதிகளில் இடம்பெறுகின்றன எனவும், இதனால், அண்மையிலுள்ள கிராமக் குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள், பாரிய பாதிப்புகளை எதிர்கொள்வதாகவும், கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக, அதிக தூசு காரணமாக சுவாச நோய், பீனிசம் போன்ற நோய்களுக்கு ஆளாவதாகவும், அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதி ஊடான வீதியையே, பாடசாலை மாணவர்களும் வயதானவர்களும் கர்ப்பிணிப் பெண்கள் என, நாளாந்தம் இவ்வீதியை, ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர் எனத் தெரிவிக்கும் மக்கள், இவ்வாண்டு பெப்ரவரியில், கிரவல் அகழ்வு வீதி ஊடாகச் சென்ற தாயொருவர், ஆழமான கிரவல் பள்ளத்துக்குள் வீழ்ந்து உயிரிழந்தார் எனவும் ஞாபகப்படுத்துகின்றனர்.

இந்த அகழ்வுப் பணிகளால், நடுஊற்றுக் கிராமம் மாத்திரமல்லாது, அதனை அண்டிய குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்கள், வீதிகள் ஆகியனவும் அழிய நேரிடலாம் என அஞ்சுவதாக, பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர்.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்துக்கு, இவ்விடயம் தொடர்பில் கொண்டு சென்றபோதும், இது விடயத்தில் அசமந்தப் போக்கிலேயே அவர்கள் செயற்படுகின்றனர் என, பொதுமக்கள் மேலும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X