Princiya Dixci / 2016 மார்ச் 01 , மு.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
கந்தளாய் பிரதேசத்தில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு நண்பர் ஒருவரைத் தாக்கிக் காயம் ஏற்படுத்திய ஒருவரை, இம்மாதம் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதவான் ருவான் திஸாநாயக்க, நேற்று திங்கட்கிழமை (29) உத்தரவிட்டார்.
கந்தளாய் ஆரியவங்சமாவத்தைப் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர், நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு நண்பரின் வீட்டுக்குச் சென்று நண்பரைப் பொல்லால் தாக்கிக் காயப்படுத்தியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
காதல் சம்பவமே தாக்குதலுக்குக் காரணம் எனவும் காயங்களுக்குள்ளானவர், கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரை, கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) இரவு கந்தளாய் பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய்ப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago