Editorial / 2018 ஓகஸ்ட் 02 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, முத்து நகர் பகுதியில் நாக பாம்பு தீண்டி, நூர் முஹம்மட் ரஸீனா (59 வயது) எனும் பெண், இன்று (02) உயிரிழந்துள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.
அரச சார்பற்ற நிறுவனமொன்றால் கிராமங்களில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டிருந்தன. அக்கோழிக் குஞ்சுகளுக்கு தீன் வைப்பதற்காக மேற்படி பெண் கோழிக்கூண்டுக்குள் சென்றுள்ள போதே, அங்கு மறைந்திருந்த நாக பாம்பூ தீண்டியுள்ளது.
இதேவேளை, வீட்டில் யாரும்மில்லாத நிலையில் கன்தளாய் பகுதியிலுள்ள தனது சகோதரிக்கு அலைபேசி அலைப்பு விடுத்து உடனடியாக வருமாறு கூறியுள்ளார்.
இதனையடுத்து, தீண்டிய பாம்பையும் அடித்து எடுத்துக்கொண்டு திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு வந்துள்ளனர்.
வைத்தியசாலைக்கு வரும் வழியிலேயே, வாயால் நுரை வந்ததாகவும் அதனையடுத்து, அப்பெண் உயிரிழந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த மரணம் தொடர்பில் சீனக்குடாப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
6 minute ago
11 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
11 minute ago
3 hours ago