Editorial / 2019 செப்டெம்பர் 02 , பி.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ், வடமலை ராஜ்குமார், அ.அச்சுதன்
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அனுபவிக்கும் துன்பங்களை, ஜனாதிபதித் தேர்தலோ, நாடாளுமன்றத் தேர்தலோ நீக்கப் போவதில்லையெனத் தெரிவித்த திருகோணமலை மாவட்ட பெண்கள் சமாஜத் தலைவியுமான எம்.என். இல் முனிசா, நாட்டின் ஜனாதிபதியைத் தீர்மானிக்கக் கூடிய சக்தி தங்களிடமே இருக்கின்றதாகத் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட பெண்கள் சமாஜம், 08 மாவட்டங்களை இணைத்து தேசிய மட்டத்தில் ஒரு பலமான அமைப்பாகத் தாம் இருப்பதாகவும் ஜனாதிபதித் தேர்தலில் இது நிச்சியம் பிரதிபலிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினத்தையொட்டி, உப்புவெளி பிரதேச சபைக் கேட்போர் கூடத்தில், நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், நிலைமாறும் கால நீதியிலுள்ள பொறிமுறையைத்தான் தாம் கேட்பதாகவும் அதை நடைமுறைப்படுத்தினாலே மக்களுக்கு ஓரளவு நிவாரணம் கொடுக்கும் என்பதை அதிகாரம் படைத்தவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்தார்.
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் பிராந்திய ரீதியாக அமைக்கப்பட வேண்டுமெனன்ற கோரிக்கையைத் தங்களுடைய அமைப்புதான் முதலில் முன்வைத்ததெனவும் அந்தவகையில், யாழ்ப்பாணம், மன்னார், மாத்தறை ஆகிய மாவட்டங்களில் அலுவலகங்கள் திறக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், திருகோணமலையிலும் அலுவலகம் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், 6,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகையை விரைவாக வழங்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
24 minute ago
35 minute ago
42 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
35 minute ago
42 minute ago
1 hours ago