Princiya Dixci / 2021 ஏப்ரல் 08 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்
திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டித்திடல் பகுதியில், நாட்டுத் துப்பாக்கிகள் இரண்டுடன் குடும்பஸ்தர் ஒருவர், இன்று (08) காலை கைதுசெய்யப்பட்டுள்ளார் என மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
தோப்பூர், பட்டித்திடல் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கட்டில் சட்டவிரோதமாக வேட்டையாடப்பட்ட மான் இறைச்சி 2 கிலோகிராம், தேவாங்கு இறைச்சி 1 கிலோகிராம் மற்றும் 2 கத்திகள் என்பனவும் கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மூதூர் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில், மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டீ.எம்.ஐ.கே. திஸாநாயக்கவின் ஆலோசனையின் பேரில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், மூதூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், மூதூர் நீதவான் நீதிமன்றில் அவரை ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
9 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago