Princiya Dixci / 2021 மே 05 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
கொரோனா பரவலின் மூன்றாம் அலை மிக மோசமாக இந்நாட்டை பாதிக்கக் கூடுமென, கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம். மஹ்தி, இன்று (05) தெரிவித்தார்.
வெளிநாடுகளையே நம்பி இருக்கும் இலங்கையில் இந்தியாவைப் போன்றதொரு மோசமான நிலையில் கொரோனா பரவல் ஏற்படுமாக இருந்தால், மிக கடினமானதொரு நிலைமைக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படுமெனவும் அவர் அச்சம் தெரிவித்தார்.
நோய்ப் பரவல் அதிகரிக்கின்ற போது, வைத்தியசாலையில் இடப்பற்றாக்குறை, ஒக்சிசன் தட்டுப்பாடு, மரணங்கள் அதிகரித்தல் மற்றும் இறுதிக் கிரியைகளை செய்வதில் சிக்கல் போன்ற பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
அவ்வாறான நிலை ஏற்பட்ட பின்னர் நாட்டை முடக்குவதை விட தற்போதே முற்காப்பு நடவடிக்கைகளை தொடர்வதோடு, முழு நாட்டையும் முடக்கியேனும் கொரோனா வைரஸ் பரவலை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, மக்களின் உயிர்களைப் பாதுகாக்க அரசாங்கம் முன் வரவேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
1 hours ago
02 Feb 2026
02 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
02 Feb 2026
02 Feb 2026