Editorial / 2019 நவம்பர் 24 , பி.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
சஜித் பிரேமதாஸவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வழங்க வேண்டுமென நான் சொல்லவில்லை எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், "நான் கூறியதாக ஊடகங்களில் வெளியாகிய செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை எனவும் தெரிவித்தார்.
பத்திரிகையொன்றில் முன்பக்க தலைப்பு செய்தியாக சனிக்கிழமை (23) "சஜித் பிரேமதாஸவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வழங்க வேண்டும் _ இரா சம்பந்தன் " என்ற செய்தி குறித்து வினவியபோது, "அப்படி ஒன்றும் நான் சொல்லவில்லை" என மறுப்புத் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்: இந்நிலையில் தான் இது தொடர்பில் எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கவில்லை எனவும், குறித்த செய்தி உண்மைக்குப் புறம்பானது எனவும் தெரிவித்துள்ளார் இரா சம்பந்தன். இச்செய்தி தொடர்பில் உரிய நேரத்தில் பதிலளிக்க உள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மேலும்தெரிவித்தார்.
5 minute ago
10 minute ago
13 minute ago
14 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
10 minute ago
13 minute ago
14 minute ago