2025 மே 01, வியாழக்கிழமை

நிலக்கடலை அறுவடை விழா

Editorial   / 2019 ஓகஸ்ட் 10 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஏ.எம்.ஏ.பரீத்,

திருகோணமலை மாவட்டத்தில் தேசிய உற்பத்தி வேலைத் திட்டத்தின் கீழ் , முள்ளிப் பொத்தானையில் கமநல சேவை நிலையத்துக்கு உட்பட்ட  கெலேஎல எனும்    கிராமத்தில் நிலக்கடலை அறுவடை விழா  நேற்று    வெள்ளிக் கிழமை  ஆரம்பமானது.விவசாய போதனாசிரியர் யூ. ஜீ. சுரேக்க விக்கிரம சிங்க மற்றும் எம். சீ. மர்சூக் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில்,  உற்பத்தி திறனை அதிகரிக்கும் எண்ணக் கருவில் நிலக்கடலை அறுவடை விழா நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் எம். பரமேஸ்வரன், கந்தளாய் உதவி விவசாயப் பணிப்பாளர் ஜே .எஸ் .கே கருணாரத்ன, பாடவிதான மற்றும் கம நல சேவை உத்தியோகத்தர் என். எம். றிஸ்வான், விவசாய போதனாசியர்கள் கமநல அபிவிருத்தி உத்தியோகத் தர்கள் மற்றும் அரசியல் பிரமுகவர்கள், விவசாயிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .