2025 மே 08, வியாழக்கிழமை

நீதிமன்ற இறப்பர் முத்திரையை வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்

எப். முபாரக்   / 2018 பெப்ரவரி 03 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, தம்பலகமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தின் இறப்பர் முத்திரையை சட்டவிரோதமாக வைத்திருந்த நபரொருவரை, எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கந்தளாய் நீதவான் துசித்த தம்மிக்க உத்தரவிட்டார்.

பாலமுனை, மண்டூர், மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர், கெக்கிராவ பகுதியில் திருமணம் முடித்துள்ளதோடு, திருகோணமலை - தம்பலகமம் பகுதியில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த நிலையில், சந்தேக நபர் தொடர்பாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில்  கைது செய்யப்ட்டுள்ளார்.

நீதிமன்றங்களில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி, நீதிமன்றத்தின் இறப்பர் முத்திரையை, சந்தேகநபர் பயன்படுத்தியிருக்கலாம் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.         


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X