2025 மே 13, செவ்வாய்க்கிழமை

நீர் இணைப்புகள் துண்டிக்கப்படும்

ஒலுமுதீன் கியாஸ்   / 2017 ஒக்டோபர் 29 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கிண்ணியா பொறுப்பதிகாரி பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் ஒரு மாதத்துக்கு மேல் நீர்ப் பட்டியல் நிலுவை செலுத்தப்படாத பாவனையாளர்களின் நீர் இணைப்புகள் துண்டிக்கப்படுமென, தேசிய நீர் வழங்கல் வடிகான் அமைப்புச் சபையின் திருகோணமலை தெற்கு, பிரதேச பொறியியலாளர் எம்.ஏ.சி.எம். ஜெஸீம் தெரிவித்தார்.

 

நீர் இணைப்புத் துண்டிப்பு தொடர்பாக இன்று (29) ஊடகங்களுக்கு அவர் தெரிவித்ததாவது,

“நவம்பர் மாதம் 14ஆம் திகதிக்கு முன்னர் செலுத்தப்படாதுள்ள நிலுவைத் தொகையைச் செலுத்தி, நீர்த்துண்டிப்பைத் தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதோடு, தவறும் பட்சத்தில் மீள் இணைப்புத் தொகை மற்றும் நிலுவைத் தொகை செலுத்திய பின்னரே மீள நீரிணைப்பு வழங்கப்படும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X