2025 மே 02, வெள்ளிக்கிழமை

‘நீர் வழிந்தோட வடிகான்கள் வேண்டும்’

எப். முபாரக்   / 2019 மே 22 , பி.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில், நீர் வழிந்தோடுவதற்கான வடிகான் வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு, பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 

கந்தளாய் பிரதேசத்தின் ரஜ-எல,பேராறு, அணைக்கட்டு, மத்ரஸா நகர் போன்ற பகுதிகளில், வடிகான் வசதிகள் இல்லாததால், மழை காலங்களில் வீடுகளிலும் காணிகளிலும், காண்களிலும் நீர்த்தேங்கி வழிந்தோடாது காணப்படுவதாக, குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். 

மழைக் காலங்களில், வீடுகளுக்கும் நீர்புகும் நிலையும் ஏற்படுவதாகவும் கந்தளாய் பிரதேசம் தாழ் நிலப்பகுதிகள் என்பதால், விரைவில் நீரில் மூழ்கிவிடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  

கந்தளாயில் நகர்ப் பகுதியில் மாத்திரம் வடிகான் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கிராமப் புறங்களில் அவ்வசதிகள் இல்லையெனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். 

எனவே, பிரதேச மக்களின் நலன் கருதி, கந்தளாய் பிரதேசத்தில் வடிகான் வசதிகளை ஏற்படுத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X