Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
வடமலை ராஜ்குமார் / 2018 மார்ச் 13 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
“தொழில் முயற்சியாளர்களுக்கான கடன் வழங்கும் போது, கடன் பெறுபவர்களை பூரணமாக ஆராய்ந்து, தனியார் நுண்கடன் நிறுவனங்கள் வழங்குவதில்லை” என, இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிராந்திய முகாமையாளர் உப்பாலி கெட்டியாராச்சி குற்றஞ்சாட்டினார்.
இதனால் பெண்களும் கடன் பெறும் ஏனையோரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனரெனவும் நுண்கடன் நிதி நிறுவனங்கள் ஆராய்ந்து கடன் வழங்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களுடன் நேற்று (12) மாலை இடம்பெற்ற சிநேகபூர்வமான கலந்துரையாடலின் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவித்த போது
“கிழக்கு மாகாணத்திலுள்ள 3 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், வங்கிச் சேவையை இலகுவாக பெறும் நோக்குடன், திருகோணமலை தபால் நிலைய வீதியில், மத்திய வங்கியின் கிளை செயற்பட்டு வருகின்றது.
“இருப்பினும், இது தொடர்பாக பொதுமக்கள் பயனடையும் சதவீதம் குறைவாகவுள்ளது. எனவே, எமது சேவைகளை மக்களுக்கு எடுத்துக் கூறவும் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஊடகங்களின் ஒத்துழைப்பு அவசியமாகவுள்ளது.
“எமது கிளையால் தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வழங்கப்படுகின்து. அத்துடன், நிதி முகாமைத்துவம், ஆவணங்களை எவ்வாறு பேணுவது?, பதிவு செய்யப்படாத நிதி நிறுவனங்களின் முறையற்ற செயற்பாட்டுக்குள் பொதுமக்கள் சிக்காமல் எவ்வாறு தம்மைப் பாதுகாப்பது?, போலி நாணயத் தாள் விடயத்தில் விழிப்பாக செயற்படுவது எவ்வாறு? உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
“மேலும், கடன் பெற்று, அதனை மீளச் செலுத்த முடியாமல் உள்ளவர்களுக்கான வழிகாட்டல்களையும் மேற்கொண்டு வருகின்றோம்” எனவும் அவர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் சுமார் 388 பதிவுசெய்யப்பட்ட நிதி நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago