எப். முபாரக் / 2019 மார்ச் 25 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எனினும், நெல்லுக்கான நிர்ணய விலையை அரசாங்கம் அறிவிக்காததால், தனியார் துறையினர் 30 ரூபாய்க்கு நெல்லைக் கொள்வனவு செய்வதாக, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால் தாம் நட்டத்துக்கு முகங்கொடுத்துள்ளதாக, திருகோணமலை மாவட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, இம்மாவட்டத்தின் கிண்ணியா, கந்தளாய் ஆகிய கமநல கேந்திர மத்திய நிலையத்துக்குட்பட்ட பிரதேசங்களில், நெல் களஞ்சியசாலைகள் இல்லாததால், அறுவடை செய்யும் நெல்லைக் களஞ்சியப்படுத்த முடியாமல் சிரமப்படுவதாக, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இவை தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமெனவும், விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
8 minute ago
22 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
22 minute ago
1 hours ago
1 hours ago