2026 மார்ச் 23, திங்கட்கிழமை

புகையிலை கலந்த கஞ்சா வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                 

புகையிலை கலந்த கஞ்சா முப்பது கிராமை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட  24 வயதுடைய ஒருவரை இம்மாதம் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் ஹயான் மீ ஹககே, நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

கஞ்சாவுடன் இச்சந்தேக நபர் திருகோணமலை, லிங்கநகர் பகுதியில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை மாலை கைதுசெய்யப்பட்டார்.

குறித்த பகுதியில் இச்சந்தேக நபர் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடியபோதே, பாதுகாப்புக் கடமையில் நின்ற பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .