Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Princiya Dixci / 2016 மே 03 , மு.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுமுதீன் கியாஸ்
உலக ஊடக சுதந்திர தினத்தையொட்டி, கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தில் பாடசாலை ஊடகக் கழகம், இன்று செவ்வாய்க்கிழமை (03) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்ட்டது.
'பயனுள்ளதும் மனித நேயமுடையதுமான ஊடகக் கலாசாரம் ஒன்றை உருவாக்குதல்' என்ற தொனிப்பொருளில் பாடசாலை ஊடகக் கழகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதிபர் திருமதி என்.எஸ்.அமீன்வாரி தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் ஊடகத் திறன், ஆக்கத் திறன், இரசனை உணர்வு, மக்கள் தொடர்பாடல், அனர்த்த மற்றும் விபத்து தொடர்பான செயற்றிட்டம் ஆகிய ஐந்து வகையான செயற்றிட்டங்களின் அடிப்படையில் செயல்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இதற்கினங்க, மாணவர்களில் இருந்து திட்ட அமைப்பாளர்கள், பிரதி அமைப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ஊடகக் கழகத்துக்காகத் தெரிவு செய்யப்பட்டார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .