2025 ஜூலை 28, திங்கட்கிழமை

பிணைக்குக் கையொப்பமிட்டவருக்கு பிணை

Thipaan   / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை, சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பிணைக்கு கையொப்பமிட்ட நபரொருவரை, ஐம்பதாயிரம் ரூபாய் சரீரப்பிணையில் செல்லுமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராசா, நேற்றுச் செவ்வாய்கிழமை (23) உத்தரவிட்டார்.

நாச்சிக்குடா, சீனக்குடா பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ஒருவரே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்தநபர், ஒரு வருடத்துக்கு முன்னர், முதலை வகையினைச் சேர்ந்த பல்லிகள் பதினெட்டினை முச்சக்கரவண்டியில் சீனக்குடாவிலிருந்து கொழும்புக்கு விற்பனைக்காகக் கொண்டு சென்ற நபருக்காக, பிணையாளராகக் கையொப்பம் இட்டிருந்தார்.

பிரதான சந்தேகநபர் வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காது வெளிநாட்டுக்கு சென்றுள்ளதால் அந்நபருக்கு பிணையாளராக கையொப்பம் இட்ட நபரை, திங்கட்கிழமை (22) கைது செய்ததாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

பிணையாளரான சந்தேகநபரை, திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் செவ்வாய்கிழமை(23) ஆஜர்படுத்தியபோதே, நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .